< Back
சினிமா செய்திகள்
வசூலில் சாதனை... ரூ.665 கோடி குவித்த பொன்னியின் செல்வன்
சினிமா செய்திகள்

வசூலில் சாதனை... ரூ.665 கோடி குவித்த 'பொன்னியின் செல்வன்'

தினத்தந்தி
|
30 Nov 2022 1:02 PM IST

‘பொன்னியின் செல்வன்’ படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.665 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

இதுவரை கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழ்நாட்டில் சுமார் ரூ.175 கோடி வரை வசூலித்து அதிகம் வசூல் குவித்த படம் என்ற பெயரோடு இருந்தது. அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது.

வெளிநாடுகளில் பொன்னியின் செல்வன் ரூ.465 கோடி வசூலித்துள்ளது. ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் நெருங்கி வருகிறது. 2.0 படம் இந்தியா முழுவதும் ரூ.508 கோடியும், வெளிநாடுகளில் ரூ.665 கோடியும் வசூலித்து இருந்தது.

2.0 படத்துக்கு பிறகு உலக அளவில் அதிகம் வசூல் பார்த்த இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமை பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்து உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார். பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்