< Back
சினிமா செய்திகள்
விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புதிய பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய பாடல் வெளியானது

தினத்தந்தி
|
20 April 2024 6:33 AM IST

'ரத்னம்' படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'உயிரே என் உயிரே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன், ரணினா ரெட்டி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரத்னம்' திரைப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்