< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புதுமுக இயக்குனரின் காதல் கதை
|30 Dec 2022 3:43 PM IST
‘1982 அன்பரசின் காதல்' என்ற தலைப்பில், புதிய படம் தயாராகி உள்ளது.
இதில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை புதுமுக டைரக்டர் உல்லாஷ் சங்கர் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, "கதையின் நாயகன் ஒரு பெண்ணை மூன்று வருடமாய், காதலை வெளிப்படுத்தாமலேயே காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுகையில் திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியாகும் நாயகன் அவளிடம் தன் காதலை சொன்னானா? என்பது கதை" என்றார். திகில், மர்மம், அதிரடி, நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, பிஜு கரிம்பின் கலையில் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: ஜிஸ்பின் செபாஸ்டியன், இசை:சிந்தாமணி.