'ஜெயிலர்' வெற்றி பெறுமா என்று நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தனர் - டைரக்டர் நெல்சன்
|நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
நெல்சன் திலீப்குமாரின் முந்தைய 'பீஸ்ட்' படம் சரியாக போகாததால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமா என்று கொஞ்சம் யோசியுங்கள் என்று தன்னிடம் பலர் தெரிவித்ததாக ரஜினியே கூறி இருந்தார்.
ஜெயிலர் தற்போது வெற்றி அடைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறும்போது, "ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரஜினியின் நடை, உடை, பாவனையும், இந்த ஸ்கிரிப்ட் மீது ரஜினிகாந்த் வைத்த நம்பிக்கையும்தான் காரணம்.
ரிலீசுக்கு முன்பாக படத்தை பார்த்த ரஜினி நான் நினைச்சத விட 10 மடங்கு ஜாஸ்தியாவே சூப்பரா வந்துருக்கு', என்று பாராட்டினார். அப்போதே எனக்கு திருப்தி வந்துவிட்டது.
ஏனெனில் படம் வெற்றி பெறுமா என்று நிறைய பேர் என்னை சந்தேகமா பார்க்கும்போது, படம் சரியா வருமா என யோசிக்கும்போது, சினிமாவின் முக்கியப்புள்ளியான ரஜினி தனது இமேஜையெல்லாம் ஒதுக்கிவைத்து, நான் சொல்வதை கேட்டு 'ஜெயிலர்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு அவர்தான் காரணம்'' என்றார்.