"நண்பர் சசிகுமாருக்கு நீண்ட நாட்கள் பிறகு அருமையான ஒரு வெற்றிப் படம்" - நடிகர் ரஜினிகாந்த் டுவீட்
|நண்பர் சசிகுமாருக்கு நீண்ட நாட்கள் பிறகு அருமையான ஒரு வெற்றிப் படம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மதப்பிரச்சினைகளை பேசும் படமாக 'அயோத்தி' உருவாகியுள்ளது. இந்த படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அயோத்தி படத்தின் கதாநாயகன் சசிகுமார், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!" என பதிவிட்டுள்ளார்.