திரைப்பட கல்லூரி மாணவர்களின் பேய் படம்
|`ஜெனி' என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகிறது. இதில் விவாந்த் நாயகனாக வருகிறார். பரம் விக்னேஷ், மைதிலி, பிஜாய் மேனன், ஆக்ஷன் பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை நித்தியானந்தம் டைரக்டு செய் கிறார். திரைப்பட கல்லூரியில் பயின்ற இவர் பல தொலைக்காட்சி தொடர்களையும் எடுத்து இருக்கிறார்.
இந்தப் படத்தை பாபு தூயவன், ஏ.முஸ்தரி ஆகியோர் தயாரித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் நித்தியானந்தம் கூறும்போது, ``துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்கிரமிக்க முயல அதில் இருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற அந்த சிறுவனும் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்தது இந்தப் படம். ரசிகர்களை இருக்கை நுனிக்கு இழுக்கும் படமாக இது இருக்கும்.
சிறந்த படைப்பாளிகளை கொண்டு அழுத்தமான கதையம்சத்தில் இந்தப்படம் உருவாகிறது. இசை: யதீஷ், திரைப்பட கல்லூரி மாணவர் கீதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பல திரைப்பட கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படமாக இது தயாராகிறது'' என்றார்.