< Back
சினிமா செய்திகள்
பெண்களின் பாதுகாப்பை பேச வரும் படம்
சினிமா செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை பேச வரும் படம்

தினத்தந்தி
|
16 Sept 2022 9:11 AM IST

பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி, ஒரு படம் தயாராகிறது.

ஏமாற்றுக்காரர்கள், மிரட்டி பணம் பறிப்பவர்கள் ஆகியோரிடம் இருந்து, பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி, ஒரு படம் தயாராகிறது.

இதில் ஈஷான் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிப்பதுடன், திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார். பிரனாலி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் கதையை மாரிச்செல்வன் எழுத, ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்