< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'இன்னும் பலர் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள்' - ராஷ்மிகா மந்தனா

தினத்தந்தி
|
27 July 2024 8:44 AM IST

'டியர் காம்ரேட்' படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

பரசுராம் பெட்லா இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கீதா கோவிந்தம்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தைத்தொடர்ந்து, 'டியர் காம்ரேட்' படத்தில் இருவரும் இணைந்தார்கள்.

பரத் கம்மா இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் குறித்த தனது நினைவுகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

டியர் காம்ரேட் படத்தை நேசித்த மற்றும் தொடர்ந்து நேசிக்கும் அனைவருக்கும் நன்றி கூறிய ராஷ்மிகா, இந்த படத்திற்காக கிரிக்கெட் விளையாடியபோது தான் காயம் அடைந்தததையும் நினைவு கூர்ந்தார். டியர் காம்ரேட் படத்திற்குப் பிறகு தான் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பலர் தன்னை லில்லி என்று அழைப்பதாக ராஷ்மிகா சுட்டிக்காட்டினார். இந்தப் படம் தொடர்பான ஒவ்வொரு தருணமும் தனக்கு பிரியமானது என்றும் கூறினார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, தனுஷுடன் குபேரா, சல்மான் கானுடன் சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்