< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
படமாகும் நாவல்
|12 May 2023 10:06 AM IST
'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஶ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.ராஜாஜி டைரக்டு செய்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ''சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலை தழுவி இந்த படம் தயாராகி உள்ளது. புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது'' என்றார். பூபதி கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
படத்தின் முதல் தோற்ற போஸ்டரை டைரக்டர் வெற்றி மாறன் வெளியிட்டு உள்ளார். மூலக்கதை: துரை குணா, ஒளிப்பதிவு: ஓ.மகேஷ், இசை:அந்தோணிதாசன், ஜேம்ஸ் வசந்தன்.