< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
குழந்தை கடத்தல் பற்றி ஒரு படம்
|9 Sept 2022 10:20 AM IST
குழந்தை கடத்தல் பற்றிய ‘ஷூ’ என்ற ஒரே ஒரு எழுத்தில் ஒரு படம் தயாராகிறது. இதுக்குறித்து பட இயக்குனர் எஸ்.கல்யாண் கூறியதாவது:-
தமிழ் பட உலகம் பல புதுமைகளை கண்டுள்ளது. சமீப காலமாக புதுமைகளை புகுத்த விரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில், 'ஷூ' என்ற ஒரே ஒரு எழுத்தில் ஒரு படம் தயாராகிறது. படம் பற்றி அதன் இயக்குனர் எஸ்.கல்யாண் சொல்கிறார் :-
இது ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை பேசும் கதை. குழந்தைகள் கடத்தல் பற்றியும் காட்சிகள் உள்ளன. அதனால் படத்துக்கு தணிக்கை குழுவினர், 'யு ஏ' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பெண்கள் இழிவாக நடத்தப்படுவது பற்றி ஒரு பாடல் இருக்கிறது.
படத்தில் கதாநாயகன் கிடையாது. கதைதான் கதாநாயகன். 'வத்திக்குச்சி' படத்தில் நடித்த திலீப்குமார், அந்தோணிதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருவார்கள். என் மகள் ப்ரியா கல்யாண் இன்னொரு முக்கிய வேடத்தில் வருகிறார். கார்த்திக், நியாஸ் ஆகிய இருவரும் படத்தை தயாரிக்கிறார்கள்.