< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இடத்தில் ஐபோனை தொலைத்த பிரபல இந்தி நடிகை
|15 Oct 2023 7:18 PM IST
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இடத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா ஐபோனை தொலைத்துள்ளார்.
அகமதாபாத்,
தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க சென்ற ஊர்வசி தனது ஐபோனை தொலைத்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர். நடிகை ஊர்வசியும் இந்த போட்டியை காண வந்துள்ளார். அப்போது அவர் தனது 24 கேரட் கோல்டு ஐபோனை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த புகார் மனுவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும், யாராவது போனை பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.