< Back
சினிமா செய்திகள்
9-வது மனைவியையும் பிரிந்த பிரபல ஹாலிவுட் நடிகர்..!
சினிமா செய்திகள்

9-வது மனைவியையும் பிரிந்த பிரபல ஹாலிவுட் நடிகர்..!

தினத்தந்தி
|
9 Sept 2023 2:40 PM IST

அல் பாசினோ இதுவரை 8 பேரை திருமணம் செய்துள்ளார்

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ. இவர் நடித்த 'ஸ்கேர் பேஸ்', 'காட்பாதர்', 'சென்ட் ஆப் எ உமன்', 'ஹீட்', 'ஐரிஷ் மேன்' போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. குறிப்பாக 'காட்பாதர்' படம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

அல் பாசினோ இதுவரை 8 பேரை திருமணம் செய்துள்ளார். அந்த எட்டு பேருமே குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் விவாகரத்து பெற்று சென்று விட்டனர். இவர்கள் மூலமாக நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 83 வயதான அல் பாசினோ, கடந்த ஆண்டு 29 வயதான நூர் அல்பலா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது அல் பாசினோவிடம் இருந்து அவரது 9-வது மனைவி நூர் அல்பலாவும் விவாகரத்து பெற்றுள்ளார். கோர்ட்டில் அனுமதி பெற்று மூன்று மாத கைக்குழந்தையையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்.

விவாகரத்து பெற்ற நூர் அல்பலா, தனது முன்னாள் காதலரின் உதவியுடன் குழந்தையின் கல்வி, மருத்துவச் செலவுகளை கவனிப்பதாக கோர்ட்டில் உறுதி அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்