'ஜப்பான்' படத்தின் டீசர் அருமையாக உள்ளது..!வித்தியாசமான முயற்சி தம்பி...கார்த்தியை பாராட்டிய சூர்யா
|டீசர் அருமையாக உள்ளது.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி.. படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்
நடிகர் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Japan Made In India.. Just love the teaser.. Totally different attempt Thambi
— Suriya Sivakumar (@Suriya_offl) May 25, 2023
Good luck to the Team!#Japan - https://t.co/PpvVN0C0Hf
Happiest birthday @Karthi_Offl have a bigger blockbuster year ahead!!
இந்நிலையில், ஜப்பான் டீசரை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜப்பான்' மேட் இன் இந்தியா.. டீசர் அருமையாக உள்ளது.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி.. படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.