< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் தயாரித்துள்ள பக்திப் படம்
|13 Jan 2023 9:30 AM IST
ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் `ஸ்ரீ சபரி ஐயப்பன்'.
ஐயப்பன் மகிமைகளை சொல்லும் பக்திப் படமாக தயாராகும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ராஜா தேசிங்கு டைரக்டு செய்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதில் நாயகனாக விஜயபிரசாத், நாயகியாக பூஜா நாகர் நடித்துள்ளனர். கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப் பதிவு: மகேஷ் மகாதேவன், இசை: பாபு அரவிந்த். இந்த படம் குறித்து டைரக்டர் பேரரசு கூறும்போது, ``தமிழகம் கடவுள்கள் நடமாடிய புண்ணிய பூமி, ஆன்மிகத்திற்கு இங்கு வரவேற்பு உண்டு. இதுபோன்ற பக்தி, ஆன்மிக படங்கள் அதிகம் வரவேண்டும்'' என்றார்.