< Back
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ்
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:36 AM IST

‘இறைவன்’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை,

'வாமனன்', 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'இறைவன்' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்