< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இரவின் நிழல் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு
|9 July 2022 2:43 PM IST
இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க நடிகர் பார்த்திபனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் வருகின்ற 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'இரவின் நிழல்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாஸ்கர் ராவ் என்பவர் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒளிப்பதிவு சாதனங்களுக்கான 25 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தாமல் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த வணிக நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் கீர்த்தனா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.