< Back
சினிமா செய்திகள்
லியோ பட வழக்கறிஞர்கள் குழு சென்ற கார் விபத்தில் சிக்கியது
சினிமா செய்திகள்

லியோ பட வழக்கறிஞர்கள் குழு சென்ற கார் விபத்தில் சிக்கியது

தினத்தந்தி
|
17 Oct 2023 8:09 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் முதல் காட்சியை காலை 7 மணிக்கு திரையிட அனுமதி கோரி லியோ படத்தின் வழக்கறிஞர்கள் குழு தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க சென்றது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்துவிட்டு புறப்பட்ட லியோ படத்தின் வழக்கறிஞர்கள் குழு சென்ற கார் விபத்தில் சிக்கியது. தலைமை செயலகத்தின் பின்புறம் உள்ள ராணுவ மைதானத்தின் அருகே வழக்கறிஞர்கள் சென்ற கார் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.



மேலும் செய்திகள்