வளரும் வில்லன்
|தமிழில் சமீப காலமாக அதிக படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்து வருபவர் எம்.பி.முத்துப்பாண்டி. `கள்ளன்', `வேலைக்காரன்', `தீரன் அதிகாரம் ஒன்று', `பில்லா பாண்டி', `ராட்சசி', `துக்ளக் தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள முத்துப்பாண்டிக்கு `அயலி' வெப் தொடர் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.வெள்ளிமலர், சினிமா செய்திகள்,
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் சீமான் போன்று பேசி நடித்து பாராட்டு பெற்றார். சமீபத்தில் விமல் நடிப்பில் திரைக்கு வந்த குலசாமி படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்தது. `ஜங்கில்', `சத்தியசோதனை', `இடும்பன் காரி', `கிளாஸ்மேட்ஸ்' உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். தமிழ் படங்களில் முக்கிய வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக மாறி உள்ள முத்துப்பாண்டி `தொடர்ந்து வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடித்து முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை' என்றார்.