< Back
சினிமா செய்திகள்
காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் 96 திரைப்படம்
சினிமா செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் '96' திரைப்படம்

தினத்தந்தி
|
10 Feb 2024 6:51 PM IST

இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான '96' திரைப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு '96' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்