9 பாலியல் வழக்குகள்: ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் விடுதலை
|கெவின் ஸ்பேசி மீது 4 ஆண்கள் அனுமதி இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி. இவர் டேட், ஒர்க்கிங் கேள், யூசுவல் சஸ்பெக்ட்ஸ், ஸ்விம்மிங் வித் ஷார்க்ஸ், செவன், பியூட்டி, பேபி டிரைவர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
1999-ல் வெளியான அமெரிக்கன் பியூட்டி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார். இந்த நிலையில் கெவின் ஸ்பேசி மீது 4 ஆண்கள் தங்கள் அனுமதி இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் அவர் மீது 9 பாலியல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. யாரிடமும் தவறாக நடக்கவில்லை என்றும், பணத்துக்காக என்மீது பொய் வழக்குகள் தொடர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறிவந்தார்.
இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டபின்பு கெவின் ஸ்பேசி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்தனர். தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்திலேயே தனது வக்கீல்களை கட்டிப்பிடித்து கெவின் ஸ்பேசி ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.