< Back
சினிமா செய்திகள்
7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம்
சினிமா செய்திகள்

'7 ஜி ரெயின்போ காலனி' இரண்டாம் பாகம்

தினத்தந்தி
|
1 Jan 2023 8:14 AM IST

‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அறிவித்து உள்ளார்.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்தின் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் '2.0' என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்', அஜித்குமாரின் 'பில்லா' படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. விக்ரமின் 'சாமி', தனுசின் 'வேலை இல்லா பட்டதாரி', விஷாலின் 'சண்டக்கோழி' மற்றும் 'கலகலப்பு' படங்களின் 2-ம் பாகம் பாகங்களும் வந்தன. சூர்யாவின் 'சிங்கம்', சுந்தர்.சியின் 'அரண்மனை' 3 பாகங்கள் வெளியானது. இந்த நிலையில் '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அறிவித்து உள்ளார். '7 ஜி ரெயின்போ காலனி' படம் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்து 2004-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. செல்வராகவன் இயக்கி இருந்தார். படத்தில் இடம்பெற்ற கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.

மேலும் செய்திகள்