'இன்னும் 75 நாட்கள்' - வைரலாகும் 'புஷ்பா 2' படத்தின் புதிய போஸ்டர்
|'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் சரியாக 75 நாட்கள் உள்ளன. இதனையடுத்து, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'இன்னும் 75 நாட்கள்' என்று பதிவிட்டும் உள்ளனர். இதனையடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.