< Back
சினிமா செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 73 வயது நடிகை
சினிமா செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 73 வயது நடிகை

தினத்தந்தி
|
14 Sept 2022 8:29 AM IST

மலையாளத்தில் பிரபல நடிகையான லீனா ஆண்டனிக்கு 73 வயது ஆகிறது. 10-வது வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி பாஸ் ஆகவேண்டும் என்று விரும்பி தேர்வை எழுதி உள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள நாடகங்களில் நடித்து இருக்கிறார். ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், 'மகள்' உள்பட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். லீனா ஆண்டனி சிறுவயதில் பத்தாவது வகுப்பு படித்தபோது தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இவரது கணவர் ஆண்டனியும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். தற்போது லீனா ஆண்டனிக்கு 73 வயது ஆகிறது. 10-வது வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி பாஸ் ஆகவேண்டும் என்று விரும்பினார். இதற்காக தீவிரமாக படித்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி உள்ளார். லீனா ஆண்டனி கூறும்போது. ''நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுத எனக்கு உதவியாக இருந்தது" என்றார்.

மேலும் செய்திகள்