< Back
சினிமா செய்திகள்
தமிழ் புத்தாண்டில் 7 படங்கள் ரிலீஸ்
சினிமா செய்திகள்

தமிழ் புத்தாண்டில் 7 படங்கள் ரிலீஸ்

தினத்தந்தி
|
11 April 2023 2:53 PM IST

பண்டிகை காலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்துவது வழக்கம்.

இந்த வாரம் தமிழ் புத்தாண்டில் அவர்கள் படங்கள் வராவிட்டாலும் பிரபல நடிகர், நடிகைகளின் படங்கள் திரைக்கு வருகின்றன.

ருத்ரன், திருவின் குரல், தமிழரசன், சொப்பன சுந்தரி, ரிப்பப்பரி, யானை முகத்தான், சாகுந்தலம் ஆகிய 7 படங்கள் தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது. ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் அதிரடி சண்டை படமாக உருவாகி உள்ளது.

தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். திருவின் குரல் படம் அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ளது. ஹரிஷ்பாபு டைரக்டு செய்துள்ளார். சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இது நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

சாகுந்தலம் துஷ்யந்தன், சகுந்தலை வாழ்க்கை கதையை மையமாக கொண்ட புராண படமாக தயாராகி உள்ளது. இதில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. யானை முகத்தான் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ரிப்பப்பரி படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். அருண் இயக்கி உள்ளார்.

மேலும் செய்திகள்