< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புதுச்சேரியில் 'லியோ' திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி
|17 Oct 2023 3:26 PM IST
புதுச்சேரியில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 7 மணிக்கு திரையிட மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 7 மணிக்கு திரையிட மாவட்ட கலெக்டர் வல்லவன் அனுமதி அளித்துள்ளார். இதன்படி வரும் 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை காலை 7 மணி காட்சியை திரையிட அனுமதி வழங்கப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளை மட்டுமே திரையிட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.