< Back
சினிமா செய்திகள்
64 வயது ஜெயசுதா மீண்டும் திருமணமா?
சினிமா செய்திகள்

64 வயது ஜெயசுதா மீண்டும் திருமணமா?

தினத்தந்தி
|
15 Jan 2023 7:22 AM IST

தொழில் அதிபர் ஒருவரை ஜெயசுதா திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், ராசலீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரஜினிகாந்தின் 'பாண்டியன்' படத்தில் அவரது சகோதரியாக வந்தார்.

நிதின் கபூர் என்பவரை ஜெயசுதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நிதின் கபூர் மும்பையில் 2017-ம் ஆண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா, இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'வாரிசு' படத்தில் விஜய்யின் தாயாக நடித்துள்ளார். தற்போது ஜெயசுதாவுக்கு 64 வயது ஆகிறது. இந்த நிலையில் தொழில் அதிபர் ஒருவரை ஜெயசுதா திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் ஜெயசுதா அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்று இருந்ததாகவும், அங்கு வைத்து தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று ஜெயசுதா மறுத்துள்ளார்.

மேலும் செய்திகள்