< Back
சினிமா செய்திகள்
4 நாட்களில் ரூ.54 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் தங்கலான்  படம்!
சினிமா செய்திகள்

4 நாட்களில் ரூ.54 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் 'தங்கலான் ' படம்!

தினத்தந்தி
|
20 Aug 2024 12:51 AM IST

விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் விக்ரம் , பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி டேனியல் கேல்டகிரோன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் , உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தங்கலான்' திரைப்படம் கடந்த ஆக. 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.18 ஆம் நூற்றாண்டு கால செட் அமைப்புகள், சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பிரமிப்பைத் தருகின்றன. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

தங்கலான் படம் முதல் நாளில் உலகளவில் 26 கோடி வசூல் செய்திருந்தது. வெளியாகிய நான்கு நாட்களில் தங்கலான் ரூ.54 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்