தனுசின் 51-வது படம்
|`வாத்தி' படத்துக்குப் பிறகு தனுஷ் `கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவரது 51-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தப் படம் அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு பொருத்தமான கதையை சேகர் கம்முலா தயார் செய்து இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேசி வருகிறார்கள். படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.