< Back
சினிமா செய்திகள்
மனநலனை காக்க 5 வழிமுறைகள் - நடிகை சுருதிஹாசன் அறிவுரை...!
சினிமா செய்திகள்

மனநலனை காக்க 5 வழிமுறைகள் - நடிகை சுருதிஹாசன் அறிவுரை...!

தினத்தந்தி
|
12 Oct 2023 8:03 AM GMT

தனது மனநலனை பாதுகாக்க 5 வழிமுறைகளை பின்பற்றுவதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகை சுருதிஹாசன் ஏற்கனவே மன நல பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதும் அதை சரி செய்வதும் எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது தனது மனநலனை பாதுகாக்க 5 வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் சுருதிஹாசன் பேசும்போது, "ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மனநலம் முக்கியமானது. இப்போது மனநல பாதிப்பில் இருந்து விடுபட நிறைய சிகிச்சை மையங்கள் உள்ளன. மனநலம் குறித்து பேச யாரும் தயங்க வேண்டாம்.

எனது மனநல பாதுகாப்புக்கு 5 வழிமுறைகளை பின்பற்றுகிறேன். அதில் ஒன்று எனது கவலையையும் அதற்கான காரணத்தையும் தினமும் அளவிடுகிறேன். இதற்காக ஒரு டைரி வைத்து அதில் குறிப்பு எழுதுவேன்.

இரண்டாவதாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன். இது உங்களின் உடலில் ரசாயனம் மற்றும் ஹார்மோன்களை சரிவிகிதத்திலும் மனதை நன்றாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

மூன்றாவது விஷயமாக ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்கள் குறித்து எனக்கு நானே பேசிக்கொள்வேன். நான்காவதாக எனக்கு பிடித்தவர்களுடன் உரையாடுவேன். எதிரில் இருப்பவர் மனநிலையை புரிந்து நடப்பேன்.

ஐந்தாவதாக சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துக்கள் என்னை எப்படி பாதிக்கிறது, பாதிக்கவில்லை என்பதை கண்காணிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்