ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேர்... வெப் சீரிஸில் களமிறங்கிய இயக்குனர் சேரன்...!
|3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
சென்னை,
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பிறகு மிக மிக அவசரம், ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு, தமிழ் குடிமகன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார். ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.
'ஜர்னி' என பெரியரிட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பையா, மாரிமுத்து, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வருகிற ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது.