< Back
சினிமா செய்திகள்
கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்
சினிமா செய்திகள்

கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்

தினத்தந்தி
|
6 May 2024 5:44 PM IST

நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்ததால், பல பகுதிகளில் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.இந்நிலையில், கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் மலைப் பிரதேசங்களுக்கும், தீவுகளுக்கும் செல்கின்றனர். கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளனர்.


அதேபோல், பாலி தீவுக்கு சென்ற எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியாவின் வீடியோ பதிவுகளும் இணையத்தில் டிரெண்டானது. இந்நிலையில், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளமான ஏற்காட்டுக்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர். இங்கு 300-க்கும் மேற்ப்பட்ட தங்கும் விடுதிகளும், பல்வேறு வகையான உணவகங்களும் உள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக மலைப் பிரதேசத்தில் எங்கும் இல்லாத அளவில் விமானத்திற்குள் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் ஆண்டுதோறும் மே மாதங்களில் பூக்கும் மே பிளவா்களும் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த நிலையில், தற்போது 5 பிரபல நடிகர்கள் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் சென்றுள்ளனர். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த்தும் இவர்களுடன் உள்ளார். நடிகர் பரத் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்