42-வது படத்தில் சூர்யா ஜோடி, திஷா பதானி
|42-வது படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார்.
சூர்யா இதுவரை 41 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 42-வது படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'சிறுத்தை' சிவா டைரக்டு செய்கிறார்.
சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய 3 படங்களும் வரிசையாக வெற்றி பெற்றன. அதைத்தொடர்ந்து அவர் 42-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் முதன் முதாலாக இணைந்து பணிபுரிவது பற்றி டைரக்டர் சிவா கூறியதாவது:-
"சூர்யாவின் 42-வது படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, ஆனந்தராஜ், கிங்ஸ்லீ, கோவை சரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு மாறுபட்ட படம். சூர்யா ரசிகர்களுக்கு மெகா விருந்தாக இருக்கும்".