< Back
சினிமா செய்திகள்
நடிகை ஷோபனா வீட்டில் ரூ.40 ஆயிரம் திருட்டு..!

By Drunkini - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=115218009

சினிமா செய்திகள்

நடிகை ஷோபனா வீட்டில் ரூ.40 ஆயிரம் திருட்டு..!

தினத்தந்தி
|
29 July 2023 12:44 PM IST

பணத்தை திருடியது அவரது வீட்டு வேலைக்கார பெண் என்பது தெரிய வந்தது.

நடிகர் ரஜினிகாந்தின் 'தளபதி' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் ஆவார். இவர், சென்னை போயஸ்கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டதாக தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பணத்தை திருடியது அவரது வீட்டு வேலைக்கார பெண் என்பது தெரிய வந்தது. வேலைக்கார பெண்ணும் தனது சம்பள பணத்தில் இருந்து திருடிய பணத்தை பிடித்தம் செய்துக் கொள்ளும்படி கூறி சமாதானம் பேசியதாக தெரிகிறது. அதனை நடிகை ஷோபனா ஏற்றுக் கொண்டு தான் அளித்த புகார் மனு மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்