40 படங்கள்...ரூ.6,000 கோடி வசூல் - 3 கான்களையும் பாக்ஸ் ஆபிஸில் முந்திய ஒரே நடிகர்
|வெற்றி படங்களின் எண்ணிக்கை மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் கான்களை பின்னுக்குத் தள்ளினார் இந்த நடிகர்.
சென்னை,
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் ஆகிய மூன்று கான்களும் சுமார் 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மூன்று நடிகர்களும் பாக்ஸ் ஆபிஸிலும் முதலிடத்தில் உள்ளனர்.
இவர்களை ஒரே ஒரு நடிகரால் மட்டுமே இத்தகைய அரியணையில் இருந்து அகற்ற முடிந்தது, அதுவும் நீண்ட காலம். தற்போது இந்த நடிகர் பாக்ஸ் ஆபிஸில் சிறிது தோல்வி கண்டிருந்தாலும் முன்பு, வெற்றி படங்களின் எண்ணிக்கை மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் கான்களை பின்னுக்குத் தள்ளினார்.
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் ஆகிய மூன்று கான்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 93 வெற்றி படங்களை கொடுத்துள்ளனர் மற்றும் இவர்களது படங்கள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ 20,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.
இருப்பினும், 2008-2019 கால கட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் முன்னிலை வகித்தார். இவர், அந்த காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.6,000 கோடி வசூலித்தன. இந்த 11 ஆண்டுகளில் சல்மான் கானின் படங்கள் ரூ.5,000 கோடியும் ஷாருக்கானின் படங்கள் ரூ.3,500 கோடியும் மட்டுமே வசூலித்தன.
வெறும் வசூலில் மட்டும் கான்களை விட அக்சய் முந்தவில்லை. வெற்றி படங்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்தார். 2008-2019 வரை அக்சய் 35 வெற்றி படங்களை கொடுத்தார், கிட்டத்தட்ட வருடத்திற்கு மூன்று. ஆனால், 3 கான்கள் இணைந்து 30 வெற்றி படங்களை மட்டுமே கொடுத்தனர். இதில் சன்மான்கான் மட்டும் 15 படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.