4 தேசிய விருது பெற்ற பிரபல டைரக்டர் மரணம்
|4 தேசிய விருது பெற்ற பிரபல வங்காள மொழி டைரக்டர் தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார்.
பிரபல வங்காள மொழி டைரக்டர் தருண் மஜூம்தார். இவரது இயக்கத்தில் வந்த கஞ்சேர் சுவர்கோ, நிமந்த்ரன், ஞானதேவத, ஆரன்ய அமர ஆகிய படங்களுக்காக 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். திரையுலக சாதனைக்காக 1990-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
2018-ல் கடைசியாக அதிகார் என்ற ஆவண படத்தை இயக்கி இருந்தார். தருண் மஜூம்தாருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பும், இதய நோயும் இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. தருண் மஜூம்தார் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.