< Back
சினிமா செய்திகள்
நாளை  ஓ.டி.டி.யில் வெளியாகும் 4 படங்கள்
சினிமா செய்திகள்

நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் 4 படங்கள்

தினத்தந்தி
|
1 Aug 2024 6:50 PM IST

நாளை எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

சென்னை,

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், நாளை எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

* சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

* வெஸ் பால் இயக்கிய அறிவியல் புனைக்கதையான 'கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்ற ஹாலிவுட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

* இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரயில்' திரைப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

* சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்