நடிகருக்கு 3-வது மனைவியா? பிரபல நடிகை விளக்கம்
|தெலுங்கு நடிகர் நரேஷை 3-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு பிரபல நடிகை பவித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை பவித்ரா. இவர் தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்யா, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், சமீபத்தில் திரைக்கு வந்த வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பவித்ராவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் முடிந்து விவாகரத்து ஆன நிலையில் தற்போது தெலுங்கு நடிகரும், பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் மகனுமான நரேஷை 3-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. நரேஷ் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், சண்ட மாருதம், மாலினி 22 பாளையங்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நரேஷும் தனது 3-வது மனைவியான ரம்யா என்பவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் நரேஷ் கூறும்போது, ''பவித்ராவை நான் திருமணம் செய்யவில்லை. எனது 3-வது மனைவி ரம்யாதான் இதுபோன்ற தவறான தகவலை பரப்புகிறார்" என்றார். பவித்ராவும் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நடிகர் நரேஷும், நானும் நண்பர்கள். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. ரம்யாவுக்கும், அவரது கணவர் நரேஷுக்கும் பிரச்சினை இருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. ஐதராபாத்தில்தான் அவர்கள் மோதிக்கொள்ள வேண்டும். பெங்களூருவில் வசிக்கும் என்னையும், நரேஷையும் இணைத்து தேவையில்லாமல் ரம்யா பேசி வருகிறார். நரேஷ் எனது நண்பர் மட்டுமே" என்றார்.