விஜய் ஆண்டனி படத்தின் 3-ம் பாகம்
|வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் மற்றும் 3-ம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டைகோழி, லாரன்சின் காஞ்சனா படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வந்தன. சந்திரமுகி, இந்தியன் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் 3-ம் பாகமும் தயாராகும் என்று விஜய் ஆண்டனி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "2025-ம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த படத்திலும் நானே நடித்து டைரக்டு செய்வேன். பிச்சைக்காரன் 3 படத்தின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும்'' என்றார்.