< Back
சினிமா செய்திகள்
33  ஆண்டுகள்; மறக்க முடியாத அன்பு... சின்னத்தம்பி படம் குறித்து உருகிய நடிகை குஷ்பு
சினிமா செய்திகள்

33 ஆண்டுகள்; மறக்க முடியாத அன்பு... 'சின்னத்தம்பி' படம் குறித்து உருகிய நடிகை குஷ்பு

தினத்தந்தி
|
12 April 2024 9:47 PM IST

காலம் வேகமாக கடந்து விடுகிறது என்பது உண்மைதான் என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

சென்னை,

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்னத்தம்பி படம் 1991-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் மனோரமா, ராதாரவி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், குயில பிடிச்சி கூண்டில் அடைச்சி, நீ எங்கே என் அன்பே, அரச்ச சந்தனம், அட உச்சம் தல ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படம் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. பிரபுவுடன் இருக்கும் படத்தின் போஸ்டரை பகிர்ந்து குஷ்பு, 'காலம் வேகமாக கடந்து விடுகிறது என்பது உண்மைதான். 'சின்னத்தம்பி' படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. படத்தின் மீது அனைவரும் காட்டிய அன்பு நம்பவே முடியாதது. அனைவருக்கும் நன்றி' எனச் சொல்லி இருக்கிறார்.

மேலும், இயக்குநர் வாசு, இசையமைப்பாளர் இளையராஜா, உடன் நடித்த நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு குஷ்புவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகமானார்கள். மேலும், இந்தப் படம் குறித்தான பழைய பேட்டி ஒன்றில்,இந்தப் படத்திற்குப் பிறகுதான் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்து கோவில் கட்டினார்கள். சிறந்த நடிகைக்கான முதல் மாநில விருது இந்த படத்துக்காகதான் வாங்கி இருந்தேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்