< Back
சினிமா செய்திகள்
கமலின் 3 படங்கள்
சினிமா செய்திகள்

கமலின் 3 படங்கள்

தினத்தந்தி
|
17 March 2023 7:22 AM IST

கமல்ஹாசன் தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த சில வாரங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 234-வது படம் குறித்த அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனது 233-வது படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்துக்குள் முடித்துவிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தின் டைரக்டர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சதுரங்க வேட்டை மூலம் பிரபலமாகி அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். 233-வது படத்தை முடித்து விட்டு மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்