< Back
சினிமா செய்திகள்
18 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகள்.... நடிகர் விஜய் பகிர்ந்த லியோ வெற்றி விழா புகைப்படங்கள் வைரல்...!

Image Credits : Instagram.com/actorvijay

சினிமா செய்திகள்

18 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகள்.... நடிகர் விஜய் பகிர்ந்த லியோ வெற்றி விழா புகைப்படங்கள் வைரல்...!

தினத்தந்தி
|
5 Nov 2023 9:43 AM GMT

நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'லியோ வெற்றி விழா' புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த விழாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றி விழாவை நிபந்தனைகளுடன் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நவம்பர் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்து பேசினர். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் பேசுபொருளானது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'லியோ வெற்றி விழா' புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் 18 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்