< Back
சினிமா செய்திகள்
கமல் நடிக்கும் 3 படங்கள்
சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 3 படங்கள்

தினத்தந்தி
|
8 Jun 2022 4:26 PM IST

கமல்ஹாசன் அடுத்து 3 படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு நடித்து திரைக்கு வந்துள்ள விக்ரம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் வேட்டையும் நிகழ்த்தி வருகிறது. இதையடுத்து கமல்ஹாசன் அடுத்து 3 படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

விக்ரம் பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிப்பாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் பகத் பாசிலை வைத்து மாலிக் படத்தை எடுத்து பிரபலமான மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இது அரசியல் கதையம்சத்தில் தயாராவதாகவும், விக்ரம் படத்தில் வந்த விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

பல வருடங்களாக முடங்கி உள்ள இந்தியன் 2 படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அந்த படம் முடிந்ததும், இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்