பசுபதி நடித்துள்ள 'தண்டட்டி' படத்தில் இருந்து 2-வது பாடல் வெளியீடு
|'தண்டட்டி' படத்தில் இருந்து 'காக்கி பையன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ள இந்த படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'தண்டட்டி' படத்தின் 2-வது பாடலான 'காக்கி பையன்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here is the lyric video of #KaakiPayyan, the second song from #Thandatti.
▶️ https://t.co/1AY7gp5uKM
Don't miss the film in theatres on June 23rd.@Dir_RamSangaiah @lakku76 @Venkatavmedia @PasupathyMasi @Rohinimolleti @SundaramurthyKS @actorvivekpra @Ammu_Abhirami pic.twitter.com/MluaH9IejV