சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணமா?
|சோனியா அகர்வால் 2 கைகளிலும் மெஹந்தி வரைந்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணம் நடக்க உள்ளது என்று வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு பரபரப்பாக்கினர்.
செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனியா அகர்வால் தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து 2006-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2010-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனால் சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கிய சோனியா அகர்வால் பின்னர் மீண்டும் வந்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சோனியா அகர்வால் தற்போது 2 கைகளிலும் மெஹந்தி வரைந்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு 2-வது திருமணம் நடக்க உள்ளது என்று வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு பரபரப்பாக்கினர். சிலர் 2-வது திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மையா? என்று கேள்வியும் எழுப்பினர். அதற்கு சோனியா அகர்வால் கூறும்போது, ''என்னுடைய திருமணத்துக்கான மெஹந்தி இந்த அளவுக்கு எளிமையானதாக இருக்காது" என்று பதில் அளித்துள்ளார்.