படுக்கைக்கு மறுத்ததால்...28 பேர் தன்னிடம்... - பிரபல நடிகையின் அதிர்ச்சி தகவல்
|28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக பிரபல நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் பிரபல நடிகை சார்மிளா. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் சுமார் 38 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சார்மிளா, படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பட வாய்ப்பை இழந்ததாக இயக்குனர், தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு 'அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்' என்ற மலையாளப் படத்தில் நடித்தபோது கேரளாவில் இருந்த ஒரு ஓட்டலில் தான் தங்கி இருந்ததாகவும், அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான எம்.பி.மோகனன், தயாரிப்பு மேனேஜர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் தன்னுடைய அறைக்குள் புகுந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் கூறி நடிகை சார்மிளா பரபரப்பைக் ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனால் அந்த அறையிலிருந்து தப்பிச்சென்று ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் கூறியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் சர்மிளா குற்றம் சாட்டி உள்ளார். பின்னர் அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர்தான் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறினார்.
இதேபோல், பிரபல இயக்குனரான ஹரிஹரன் என்பவர் 'பரிணயம்' என்ற படத்திற்காக தன்னை அணுகியபோது படுக்கைக்கு அழைத்ததாகவும், தான் மறுத்ததால் அந்தப் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என 28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் சார்மிளா. வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறும் சார்மிளா தனக்கு ஒரு மகன் இருப்பதால் போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.