< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சினிமாவில் 25 ஆண்டுகள்- நடிகர் சூர்யா மகிழ்ச்சி
|7 Sept 2022 12:32 PM IST
சூர்யா சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு உள்ளார்.
''நிஜமாகவே அழகான ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள். கனவு காணுங்கள். நம்புங்கள்" என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். சூர்யாவுக்கு வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவில் 25 ஆண்டுகள் சூர்யா என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி உள்ளது. வசந்த் இயக்கத்தில் 1997-ல் வெளியான நேருக்கு நேர் சூர்யா நடித்த முதல் படம். இதில் விஜய்யுடன் இணைந்து நடித்து இருந்தார். நந்தா, பிதாமகன், காக்க காக்க, ஏழாம் அறிவு, சிங்கம், மாற்றான் என்று ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு முகம் காட்டி சிறந்த நடிகராக தன்னை அடையாளம் காட்டி வருகிறார். சூரரை போற்று, ஜெய்பீம் படங்கள் சூர்யாவை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றன. தற்போது வணங்கான் படத்தில் நடிக்கிறார்.