சினிமா செய்திகள்
சென்னை
சினிமா செய்திகள்
காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதியா? ஆண்ட்ரியா விளக்கம்
|28 Dec 2019 4:37 AM IST
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஆண்ட்ரியா. பின்னணி பாடல்களும் பாடி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆண்ட்ரியா தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது காதல் தோல்வி குறித்து பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
“எனக்கும் திருமணமான அரசியல்வாதியும் நடிகருமான ஒருவருக்கும் காதல் இருந்தது. என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தினார். இதனால் காதல் முறிந்து மன அழுத்தம் ஏற்பட்டு அதில் இருந்து மீள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நான் எழுதும் புத்தகத்தில் அரசியல்வாதி பெயரை குறிப்பிட்டு இருக்கிறேன் என்று பேசியதாக தகவல் வெளியானது.
இதனால் ஆண்ட்ரியாவுக்கு மிரட்டலும் புத்தகத்தை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்பட்டது. ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி யார் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு ஆண்ட்ரியா தற்போது அளித்துள்ள விளக்கத்தில், “நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் என்னை மறந்து வெளிப்படையாக பேசிவிட்டேன். எனது மோசமான காதல் குறித்து சில விஷயங்களை வெளிப்படுத்தியதும் உண்மைதான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. கற்பனையாக யாரோ அதை கிளப்பி விட்டு விட்டனர். என்னை காதலித்தவர் அரசியல்வாதியாக இருக்கும் நடிகர் இல்லை” என்றார்.