< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் 18 ஆண்டுகள்... நடிகை தமன்னா நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

சினிமாவில் 18 ஆண்டுகள்... நடிகை தமன்னா நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
5 March 2023 7:26 AM IST

நடிகை தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. இந்தியில் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் ஷேஹ்ரா படம் 2005 மார்ச் 4-ந் தேதி வெளியானது. அடுத்த வருடமே தமிழில் கேடி படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.


தெலுங்கு, இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பாகுபலி தமன்னாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

சினிமாவில் நீடிப்பது குறித்து தமன்னா நெகிழ்ச்சியோடு கூறும்போது, 'சினிமாவில் 18 ஆண்டுகளாக நடித்து வருவது மனதுக்கு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நிறைய விஷயங்களில் முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். ரசிகர்கள் என்மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள்.

இது ஆரம்பம்தான். ஒவ்வொரு நாளும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

மேலும் செய்திகள்