< Back
சினிமா செய்திகள்
சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு..! ரஜினியை சந்தித்து ஷங்கர் நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

'சிவாஜி' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு..! ரஜினியை சந்தித்து ஷங்கர் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
15 Jun 2022 10:52 PM IST

சிவாஜி திரைப்படம் 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் .

சென்னை ,

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'.

இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவாஜி திரைப்படம் 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் ஷங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

சிவாஜி திரைப்படம் 15 ஆண்டுகள் நிறைவையொட்டி ரஜினியை சந்தித்ததில் மகிழ்ச்சி.உங்களின் ஆற்றல், பாசம், நேர்மறை சிந்தனைகள் எனது நாளை மிகச் சிறந்த நாளாக ஆக்கியுள்ளது என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்