< Back
சினிமா செய்திகள்
லண்டன் சென்ற பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் திருட்டு; பாஸ்போர்ட் மாயம்
சினிமா செய்திகள்

லண்டன் சென்ற பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் திருட்டு; பாஸ்போர்ட் மாயம்

தினத்தந்தி
|
30 Aug 2023 11:14 AM IST

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் தனுசின் ஜெகமே தந்திரம் மற்றும் பப்பூன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஆண்டனி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் லண்டன் சென்று இருந்தார். அங்கு திடீரென்று ஜோஜு ஜார்ஜிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் திருட்டு போனது. அவரது பாஸ்போர்ட்டும் மாயமானது.

லண்டனில் படக்குழுவினருடன் ஷாப்பிங் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. இதுபோல் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரின் பாஸ்போர்ட்டும் காணாமல் போனது. நடிகர் செம்பன் வினோத், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இன்னொரு காரில் வந்ததால் அவர்களின் பொருட்கள் பத்திரமாக இருந்தன.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தலையிட்டு ஜோஜு ஜார்ஜ் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்தது. இதையடுத்து அவர்கள் இந்தியா திரும்பினர்.

மேலும் செய்திகள்